உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மீனம்

வார பலன் (13.2.2026 - 19.2.2026)மீனம்: செந்தில் வேலனை வழிபட சங்கடம் விலகும்.பூரட்டாதி 4: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் எடுக்கும் வேலை வெற்றியாகும். எதிர்பார்த்த பணம்வரும்.  வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய தொழில், வியாபாரம் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.உத்திரட்டாதி: கூட்டு கிரகங்களால் செயல்களில் குழப்பமும், உடல்நிலையில் பாதிப்பும் ஏற்படக்கூடும். ஆறாமிட கேதுவால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல் உங்களுக்கேற்பட்ட சங்கடங்கள் பாதிப்புகள் விலகும். வம்பு வழக்கு என்ற நிலை மாறும்.ரேவதி: செவ்வாயும், கேதுவும் உங்கள் நிலையை உயர்த்துவர். போராட்டம், பிரச்னை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும்.  எதிர்பார்த்த பணம் வரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !