உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மீனம்

வார பலன் (17.4.2026 - 23.4.2026)மீனம்: குலதெய்வ வழிபாடு நன்மை அளிக்கும்.பூரட்டாதி 4: தொழில், விரய ஸ்தானங்களுக்கு குரு பார்வை கிடைக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். எடுக்கும் வேலை முடியும், வீண் செலவு கட்டுப்படும்.உத்திரட்டாதி: ஜென்ம ராசிக்குள் சனி செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் மனம் பேதலிக்கும், எதிலும் சரியான முடிவெடுக்க முடியாமல் போகும். தேடி வரும் வாய்ப்புகளும் உங்கள் அலட்சியத்தால் கைவிட்டுப் போகும். அனைத்திலும் நிதானம் தேவை.ரேவதி: ராசிக்குள் புதன் சஞ்சரிப்பதால் வேலை மற்றும் தொழிலின் காரணமாக திடீர் பயணம் ஏற்படும், ஒவ்வொரு வேலையையும் சிரமப்பட்டு முடிக்க வேண்டியதாக இருக்கும். சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கு கேது இந்த நேரத்தில் உங்களைப் பாதுகாப்பார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !