/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் மீனம்
வார பலன் ( 15.5.2026 - 21.5.2026)மீனம்: நடராஜரை வழிபட நன்மை உண்டாகும். சங்கடம் விலகும்.பூரட்டாதி 4: குரு பார்வைகளால் உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். எடுக்கும் வேலைகளை முடிக்க முடியும். வீண் செலவு கட்டுப்படும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். ஆரோக்கியம் மேம்படும்.உத்திரட்டாதி: ஜென்ம ராசிக்குள் சனி சஞ்சரிப்பதால் மனம் பேதலிக்கும். எதிலும் சரியான முடிவெடுக்க முடியாமல் போகும். தேடி வரும் வாய்ப்புகளும் உங்கள் அலட்சியத்தால் கை விட்டுப்போகும். அனைத்திலும் நிதானம் தேவை.ரேவதி: சூரியன் புதன் சஞ்சரிப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படும் வேலை லாபம் தரும். அரசுவழி முயற்சி சாதகமாகும். உடல்நிலை சீராகும். வரவேண்டிய பணம் வரும். வழக்கு சாதகமாகும்.