உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மீனம்

 வார பலன் ( 19.6.2026 - 25.6.2026 )மீனம்: குச்சனுார் சனி பகவானை வழிபட சங்கடம் விலகும்.பூரட்டாதி 4: குருவின் சஞ்சாரமும் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் உங்கள் நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். உயர்கல்வி, குழந்தை பாக்யம் என்ற கனவு நனவாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். செவ்வாய் அன்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது.உத்திரட்டாதி: உங்கள் ராசிக்கும், ராசிக்குள் சஞ்சரிக்கும் சனிக்கும் குரு பார்வை உண்டாவதால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். செவ்வாய் புதன் அன்று விழிப்புணர்வு தேவை.ரேவதி: எந்த வேலையாக இருந்தாலும் அதை நன்றாக யோசித்து செய்வது நல்லது. புதிய முதலீடுகளில் நிதானம் தேவை. வெளியூர் பயணங்களிலும் பண விவகாரத்திலும் எச்சரிக்கை அவசியம். வியாழக்கிழமை விழிப்புடன் செயல்பட வேண்டிய நாளாகும்.சந்திராஷ்டமம்: 24.6.2026 அதிகாலை 4:59 மணி - 26.6.2026 மாலை 3:08 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !