வார ராசிபலன்
வார ராசிபலன் மீனம்
வார பலன் ( 26.6.2026 - 2.7.2026 )மீனம்: நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானை வழிபட நன்மை உண்டாகும்.பூரட்டாதி 4: குருவும் அவருடைய பார்வையும் உங்கள் வாழ்வை வளமாக்கும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். உத்திரட்டாதி: ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் சனிக்கு குரு பார்வை உண்டாவதால் இதுவரை உங்களுக்கு இருந்த சங்கடம் விலகும். உடல்நிலை சீராகும். வம்பு வழக்கு முடியும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.ரேவதி: சுக ஸ்தானத்தில் சூரியன், வக்கிர நிலையில் புதன் சஞ்சரிப்பதால் எடுக்கும் வேலைகளில் கவனம் தேவை. பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம். எதிரிகளால் சங்கடமும் பிரச்னைகளும் உருவாகும். கேதுவும், குருவும் அரண்போல் உங்களைப் பாதுகாப்பர். வெள்ளி அன்று நிதானமாக செயல்படுவது அவசியம்.சந்திராஷ்டமம்: 24.6.2026 அதிகாலை 4:59 மணி - 26.6.2026 மாலை 3:08 மணி