உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மீனம்

வார பலன் (14.8.2026 - 20.8.2026)மீனம்: நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானை வழிபட சங்கடம் விலகும்.பூரட்டாதி 4: பூர்வ புண்ணிய ஸ்தான குருவும் அவருடைய பார்வைகளும் உங்கள் வேலைகளை வெற்றியாக்கும். செல்வாக்கை உயர்த்தும். பொன் பொருள் சேரும். சிலருக்கு சொந்த இடம் வீடு என்ற கனவு நனவாகும். உடல்நிலை சீராகும். திங்கள் அன்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது.உத்திரட்டாதி: செவ்வாய் முதல் சூரியன் ஆறாமிடத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரம் தொழில் வளர்ச்சி பெறும். உடல்நிலையும் மனநிலையும் சீராகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சிந்தித்து செயல்படுவது நல்லது.ரேவதி: தெளிவுடன் செயல்படுவீர். வரவேண்டிய பணம் வரும். எடுக்கும் வேலை நடக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். புதன்கிழமை விழிப்புடன் செயல்படவும்.சந்திராஷ்டமம்: 17.8.2026 இரவு 8:15 மணி - 20.8.2026 அதிகாலை 5:52 மணி 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !