வார ராசிபலன்
வார ராசிபலன் மீனம்
வார பலன் (21.8.2026 - 27.8.2026)மீனம்: அங்காள பரமேஸ்வரியை வழிபட நன்மை உண்டாகும்.பூரட்டாதி 4: பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராசிநாதன் குரு உச்சமாக சஞ்சரித்து ராசியைப் பார்ப்பதால் உங்கள் செல்வாக்கு அந்தஸ்து உயரும். நெருக்கடிகள் நீங்கும். எடுத்த வேலை வெற்றியாகும். குடும்பம் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும்.உத்திரட்டாதி: ஜென்ம சனி வக்கிரம் அடைந்திருப்பதுடன், ஆறாமிடத்தில் சூரியன், புதன், கேது சஞ்சரிப்பதால் உங்களுக்கிருந்த பயம் போகும். சங்கடங்கள் விலகும். உடல்நிலை சீராகும். வம்பு வழக்குகள் முடிவிற்குவரும். தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். அரசுவழி முயற்சிகள் வெற்றியாகும்.ரேவதி: குரு, புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். எடுக்கும் வேலை முடிவடையும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலர் இடம், வீடு வாங்குவீர்கள். புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.