/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் மீனம்
வார பலன் (25.9.2026 - 1.10.2026)மீனம்: தர்பாரண்யேஸ்வரரை வழிபட சங்கடம் விலகும். நன்மை உண்டாகும்.பூரட்டாதி 4: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆச்சரியப்படும் வகையில் நிலை உயரும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பிள்ளைகளின் வேலை, திருமணம் என்ற முயற்சி வெற்றியாகும்.உத்திரட்டாதி: உங்களுக்கிருந்த சங்கடங்களும் போராட்ட நிலையும் மாறும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். குடும்ப குழப்பம் விலகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரம் வளர்ச்சி அடையும்.ரேவதி: எடுத்த வேலை எல்லாம் வெற்றியாகும். நினைத்த செயல் யாவும் நடக்கும். புதிய இடம் என்ற கனவு நனவாகும். ஒப்பந்தம் கையெழுத்தாகும். எதிர்பார்த்த பணம் வரும். வழக்கு சாதகமாகும்.