உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மீனம்

வார பலன் (2.10.2026 - 8.10.2026)மீனம்: சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.பூரட்டாதி 4: உச்ச குருவால் வாழ்வில் இருந்த சங்கடம் விலகும். செல்வாக்கு உயரும். பட்டம் பதவி தேடி வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பொருளாதார நெருக்கடி நீங்கும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும்.உத்திரட்டாதி: ஆறாமிட கேது செல்வாக்கை உயர்த்துவார். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். ராசிக்கு குருபார்வை கிடைப்பதால் எடுத்த வேலை வெற்றியாகும். வேலையில் நிம்மதி உண்டாகும். பிள்ளைகளின் வேலை, திருமணம் என்ற எண்ணம் நிறைவேறும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும்.ரேவதி: புத பலத்தால் நினைத்ததை சாதிப்பீர். கலைஞர்களுக்கும் வியாபாரிகளுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். புதிய இடம் வீடு வாங்கும் கனவு நனவாகும். அரசு பணியில் இருக்கும் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். வழக்கு விவகாரம் சாதகமாகும். திருமண வயதினருக்கு வரன் அமையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !