உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மீனம்

வார பலன் (16.10.2026 - 22.10.2026 )மீனம்: பைரவரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.பூரட்டாதி 4: செவ்வாய்க்கிழமை வரை எடுத்த வேலை வெற்றியாகும். குடும்பம் தொழிலில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னையில் சுமூக நிலை உண்டாகும்.உத்திரட்டாதி: ஜென்ம ராசியில் சனி சஞ்சரிக்கும் நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் குரு பார்வை ராசியை விட்டு விலகுவதால் உடல்நிலையில் கவனம் தேவை. மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்படுவதுடன் எடுக்கும் வேலைகளும் மந்தமாகும். கேதுவால் தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.ரேவதி: புதனால் வரவேண்டிய பணம் வரும். வியாபாரம் லாபம் தரும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். உறவினருடன் ஏற்பட்ட பிரச்னை முடியும். கலைஞர்கள் நிலை உயரும். பொன் பொருள் சேரும். வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !