/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் மேஷம்
வார பலன் (28.8.2026 - 3.9.2026)மேஷம்:முருகப் பெருமானை வழிபட உங்கள் வேண்டுதல் பலிதமாகும்.அசுவினி:மனதில் குழப்பம் செயல்களில் நெருக்கடி இருந்தாலும் ராசிநாதன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை முடிவிற்குவரும். உங்கள் செல்வாக்கு உயரும். வருவாய் அதிகரிக்கும்.பரணி:திட்டமிட்டு செயல்படுவதால் எடுத்த வேலைகள் வெற்றியாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். வேலைபளுவால் சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.கார்த்திகை 1ம் பாதம்:உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் எடுத்த வேலையை முடிப்பதில் உறுதியாக இருப்பீர்கள். அரசுவழி வேலைகள் சாதகமாகும். உறவினருடன் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். உழைப்பின் காரணமாக சிலருக்கு உடல்நிலையில் சிறு சங்கடம் ஏற்பட்டு விலகும்.