உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மேஷம்

வார பலன் (6.6.2025 - 12.6.2025)மேஷம்: ஆபத்சகாயேசுவரரை வழிபட நன்மை உண்டாகும்.அசுவினி: பஞ்சம ஸ்தானத்தில் கேதுவுடன் செவ்வாய் இணைவதால் செயல்களில் கவனம் தேவை. குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. செய்து வரும் தொழிலில் நேரடிப்பார்வை அவசியம். திங்கள் செவ்வாயில் அனைத்திலும் விழிப்புணர்வு தேவை.பரணி: சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் விருப்பம் பூர்த்தியாகும். வியாபாரம் விருத்தியாகும். எதிர்பார்த்த லாபம் வரும். தடைபட்ட வேலை நடக்கும். ஒருசிலர் புதிய வாகனம் வாங்குவீர். செவ்வாய் புதனில் நிதானமாக செயல்படுவது நல்லது.கார்த்திகை 1ம் பாதம்: சூரியன் தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மனம் குழப்பம் அடையும். குடும்பத்தில் பிரச்னை உருவெடுக்கும். குருப்பார்வை உண்டாவதால் தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். இடம், வீடு வாங்கும் கனவு நனவாகும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். முடங்கி இருந்த தொழில் முன்னேற்றம் அடையும். புதன்கிழமை நிதானம் காப்பது நல்லது.சந்திராஷ்டமம்: 9.6.2025 காலை 10:09 மணி - 11.6.2025 இரவு 8:56 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !