உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மேஷம்

வார பலன் (13.6.2025 - 19.6.2025)மேஷம்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வழிபட நன்மை உண்டாகும்.அசுவினி: பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராசி நாதனும் கேதுவும் சஞ்சரிப்பதால் செயல்களில் தடுமாற்றம், குடும்பத்தில் நிம்மதி இன்மை, பூர்வீக சொத்தில் பிரச்னை என்று ஏற்பட்டாலும் குருப்பார்வைகளால் நெருக்கடி நீங்கும். வரவு அதிகரிக்கும்.பரணி: ஜென்ம ராசிக்குள் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். புதிய பொருள் சேரும். முதலீடு லாபமாகும். தொழில் முன்னேற்றம் அடையும். தடைபட்ட வேலை நடக்கும்.கார்த்திகை 1ம் பாதம்: ஞாயிறு முதல் சூரியன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். முன்பு இருந்த நெருக்கடி நீங்கும். செல்வாக்கு உயரும். குருவின் பார்வையால் முடங்கி இருந்த தொழில் மீண்டும் லாபம் அடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !