வார ராசிபலன்
வார ராசிபலன் மேஷம்
வார பலன் (27.6.2025 - 3.7.2025)மேஷம்: சுப்ரமணியரை வழிபட சங்கடம் விலகும்.அசுவினி: ராசிநாதன் கேதுவும் செவ்வாயும் சேர்ந்து இருப்பதால் செயல்களில் கவனம் தேவை. அலட்சியத்திற்கு இடம் கொடுக்காமல் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவதும், சொத்து விவகாரங்களை தள்ளிப்போடுவதும் அவசியம்.பரணி: சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பண நெருக்கடி நீங்கும். வரவேண்டிய பணம் வரும். லாப ஸ்தானத்தில் சனி, ராகு சஞ்சரிப்பதால் தொழில் முன்னேற்றம் அடையும். வியாபாரத்தில் லாபம் கூடும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.கார்த்திகை 1ம் பாதம்: சகாய ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். புத்திசாலித்தனம் வெளிப்படும். ஒரு சிலர் புதிய இடம் வீடு வாங்குவீர்.