வார ராசிபலன்
வார ராசிபலன் மேஷம்
வார பலன் (11.7.2025 - 17.7.2025)மேஷம்: அதிகாலையில் சூரியனை வழிபட நன்மை உண்டாகும்.அசுவினி: பூர்வ புண்ணியத்தில் கேது சஞ்சரிக்க செயல்களில் தடுமாற்றம், பூர்வீக சொத்தில் பிரச்னை ஏற்படும். லாப ராகுவால் தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும். பொருளாதார நிலை உயரும்.பரணி: தனாதிபதி சுக்கிரன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். புதிய பொருள் சேரும். முதலீடுகள் லாபமாகும். தடைபட்ட வேலை நடக்கும். குருபார்வைகளால் திருமண வயதினருக்கு வரன் வரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும்.கார்த்திகை 1ம் பாதம்: சூரியன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். செல்வாக்கு உயரும். அரசுவழி வேலை சாதகமாகும். குருவின் பார்வையாலும் ராகு சஞ்சாரத்தினாலும் முடங்கியிருந்த தொழில் லாபத்தை நோக்கிச்செல்லும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.