/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் மேஷம்
வார பலன் (25.7.2025 - 31.7.2025)மேஷம்: திருச்செந்துார் முருகனை வழிபட நல்லது நடக்கும்.அசுவினி: புண்ணிய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி விலகும். உடல்நிலை சீராகும். வம்பு வழக்கு சாதகமாகும். தொழில் முன்னேற்றம் அடையும்.பரணி: சுக்கிர பகவான் பண நெருக்கடியை குறைப்பார். ராகு பகவான் தொழிலில் முன்னேற்றம் அடையும். வியாபாரத்தில் லாபம் கூடும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். கார்த்திகை 1ம் பாதம்: மனதில் இனம்புரியாத பயம் ஏற்படும். குருவின் பார்வையும், லாப ராகுவும், வாரத்தின் பிற்பகுதியில் ராசிநாதனும் உங்கள் நிலையை உயர்த்துவார். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். எடுக்கும் வேலை லாபமாகும்.