உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மேஷம்

 வார பலன் 29.8.2025 - 4.9.2025மேஷம்: திருப்பரங்குன்றம் சுப்ரமணியரை வழிபட நன்மை உண்டாகும்.அசுவினி: ஐந்தாமிடத்தில் கேது, சூரியன், புதன் சஞ்சரிப்பதால் செயல்களில் நிதானம் தேவை. சொத்தில் எதிர்பாராத பிரச்னை ஏற்படும். குருவினால் செயல்கள் யாவும் சாதகமாகும். தடைபட்ட வேலை நடக்கும். சனி, ஞாயிறில் விழிப்புணர்வு அவசியம்.பரணி: சுக்கிரன் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். உங்கள் நிலை உயரும். பொன் பொருள் சேரும். ராசிநாதன் செவ்வாயால் எதிர்ப்பு மறையும். போட்டி விலகும். உத்தியோகத்தில் நிம்மதியான நிலை ஏற்படும். ஞாயிறு, திங்களில் நிதானமாக செயல்படுவது நல்லது.கார்த்திகை 1ம் பாதம்: பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் எடுத்த வேலை முடியும். செல்வாக்கு உயரும். குரு பார்வையால் திருமண வயதினருக்கு வரன் வரும். புதிய இடம் வீடு வாங்கும் கனவு நனவாகும். திங்கள் கிழமை திட்டமிட்டு செயல்படுவது நல்லது.சந்திராஷ்டமம்: 30.8.2025 காலை 7:56 மணி - 1.9.2025 இரவு 7:12 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !