உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மேஷம்

வார பலன் (14.11.2025 - 20.11.2025)மேஷம்: வீரட்டேஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.அசுவினி: தடைபட்ட வேலை முடியும். குடும்பத்தில் தோன்றிய நெருக்கடி நீங்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். யோகக்காரகன் ராகுவால் வரவேண்டிய பணம் வரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். வியாழக்கிழமை வேலைகளில் விழிப்புணர்வு அவசியம்.பரணி: புதிய நட்பால் தம்பதிக்குள் சண்டை சச்சரவு வரும். அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் பகவானுக்கு குரு பார்வை உண்டாவதால் எடுத்த வேலை நடக்கும். செல்வாக்கு வெளிப்படும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும்.கார்த்திகை 1ம் பாதம்: திங்கள் முதல் சூரியன், செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால்  எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும். சந்திராஷ்டமம்: 20.11.2025 அதிகாலை 5:11 மணி - 22.11.2025 மாலை 4:46 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !