வார ராசிபலன்
வார ராசிபலன் மேஷம்
வார பலன் (21.11.2025 - 27.11.2025)மேஷம்: திருச்செந்துார் முருகனை வழிபட சங்கடம் விலகும்.அசுவினி: ஐந்தாமிட கேதுவால் குடும்பத்தில் சங்கடம் உண்டாகும். வேலையில் நெருக்கடியை ஏற்படும். சனியும் ராகுவும் உயர்த்துவர். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வரவேண்டிய பணம் வரும். தடைபட்ட வேலை நடக்கும்.பரணி: சுக்கிரன் நட்பு வட்டத்தை விரிவு படுத்துவார். ஒரு சிலருக்கு எதிர்பாலினரால் வழக்கமான வேலைகளில் தடை உண்டாகும். குடும்பத்தில் குழப்பம் தோன்றும். எச்சரிக்கை அவசியம். வெள்ளி, சனியில் அனைத்திலும் கவனம் தேவை.கார்த்திகை 1ம் பாதம்: அஷ்டம ஸ்தானத்தில் ராசியாதிபதி செவ்வாயும் சூரியனும் சஞ்சரிப்பதால் உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். வேலையில் இருப்பவர்கள் அதிகாரியின் கண்டிப்பிற்கு ஆளாவீர்கள். ஒரு சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். சனிக்கிழமை திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.சந்திராஷ்டமம்: 20.11.2025 அதிகாலை 5:11 மணி - 22.11.2025 மாலை 4: 46 மணி