/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் மேஷம்
வார பலன் ( 19.12.2025 - 25.12.2025 )மேஷம்: விஷ்ணு துர்கையை வழிபட சங்கடம் விலகும்.அசுவினி: திட்டமிட்டு செயல்படுவதால் வேலைகள் நடக்கும். குடும்பத்தில் உள்ள நெருக்கடி என்ற நிலை மாறும். பொருளாதாரம் உயரும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும்.பரணி: அதிர்ஷ்ட வாய்ப்பு வாசல் தேடிவரும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கடனாக கேட்ட பணம் கிடைக்கும். உங்கள் முன்னேற்றத்திற்குரிய வழி தெரியும். வெள்ளிக்கிழமை கவனம் தேவை.கார்த்திகை 1ம் பாதம்: தடைபட்ட வேலை நடக்கும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு உயரும். விரும்பிய பொருள்களை வாங்குவீர். வெள்ளிக்கிழமை செயல்படுவது அவசியம்.சந்திராஷ்டமம்: 17.12.2025 மதியம் 12:26 மணி - 20.12.2025 அதிகாலை 12:06 மணி