/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் மேஷம்
வார பலன் (26.12.2025 – 1.1.2026)மேஷம்: சனீசுவரனை வழிபட சங்கடங்கள் விலகும்.அசுவினி: பூர்வ புண்ணியாதிபதியும் ராசிநாதனும் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பெரியோரின் ஆதரவும் தெய்வ அருளும் உண்டாகும். எடுத்த வேலைகள் வெற்றியடையும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.பரணி: லாப ஸ்தான சனியும் ராகுவும் பணப்புழக்கத்தை உண்டாக்குவர் கடந்த வார நெருக்கடிகள் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.கார்த்திகை 1ம் பாதம்: கவனமாக செயல்பட உங்கள் வேலைகளில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நன்மையாகும். தேவைக்கேற்ற பணம் வரும். தனக்காரகன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும்.