/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் மேஷம்
வார பலன் ( 2.1.2026 - 8.1.2026 )மேஷம்: அதிகாலையில் சூரியனை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.அசுவினி: ஒரு பக்கம் நெருக்கடி ஏற்பட்டாலும் மறுபக்கம் வேலைகளில் வெற்றி உண்டாகும். நினைத்த செயல் நடக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் ஆதரவு கிடைக்கும்.பரணி: வியாபாரம் முன்னேற்றம் அடையும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். வேலைக்கான முயற்சி வெற்றியாகும். பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். நெருக்கடி நீங்கும்.கார்த்திகை 1ம் பாதம்: எடுத்த வேலை நடக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஒவ்வொரு வேலையையும் திட்டமிட்டு செய்வது நல்லது. அரசு வழி வேலைகளில் அதிகபட்ச கவனம் தேவை. வியாபாரிகள் கணக்கை சரியாக வைத்துக் கொள்வது நல்லது.