உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மேஷம்

 வார பலன் (16.1.2026 - 22.1.2026)மேஷம்: அதிகாலையில் சூரியனை வழிபட எடுத்த வேலை நடக்கும்.அசுவினி: கடந்த வாரம்வரை இருந்த நெருக்கடி விலகும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கையில் பணம் புழங்கும். குடும்பத்தில் இருந்த பொருளாதார நிலை உயரும்.பரணி: பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை மாறும். வாய்ப்புகள் தேடிவரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் கனவு நனவாகும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.கார்த்திகை 1ம் பாதம்: ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் செல்வாக்கு உயரும். தடைபட்டு வந்த வேலை நடக்கும். புதிய தொழில் தொடங்க அரசின் அனுமதி கிடைக்கும்.  உங்கள் செல்வாக்கு உயரும்.சந்திராஷ்டமம்: 13.1.2026 இரவு 7:46 மணி - 16.1.2026 காலை 7:26 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !