/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் மேஷம்
வார பலன் (23.1.2026 - 29.1.2026)மேஷம்: அதிகாலையில் சூரிய பகவானை வழிபட சங்கடம் விலகும்.அசுவினி: லாப ஸ்தானம் பலம் பெறுவதால் பண நெருக்கடி நீங்கும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதிய முயற்சிகளில் இறங்கி லாபம் காண்பீர். எடுத்த வேலை அனைத்தும் வெற்றி பெறும்.பரணி: புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட சங்கடம் விலகும். கேட்ட இடத்தில் பணம் வரும். ஒருசிலருக்கு ஒப்பந்தம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நெருக்கடி விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.கார்த்திகை 1ம் பாதம்: புண்ணியாதிபதி ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் வரும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வரும். வியாபாரத்தை விரிவு செய்வீர்.