உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மேஷம்

வார பலன் (13.2.2026 - 19.2.2026)மேஷம்: துர்கையை வழிபட சங்கடம் விலகும்.அசுவினி: எடுத்த வேலைகளில் வெற்றி உண்டாகும். உங்களுக்கு ஏற்பட்ட சங்கடம் பிரச்னை விலகும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். கையில் பணம் புழங்கும். வேலையில் இருந்த நெருக்கடி விலகும். பொருளாதார நிலை உயரும்.பரணி: இழுபறியாக இருந்த வேலை முடியும். வாய்ப்பு தேடி வரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். சிலரின் கனவு நனவாகும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.கார்த்திகை 1ம் பாதம்: லாப ஸ்தானம் பலம் அடைவதால் வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் தொடங்க அரசின் அனுமதி கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !