உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மேஷம்

வார பலன்  (20.2.2026 - 26.2.2026)மேஷம்:  குலதெய்வத்தை வழிபட சங்கடம் விலகும்.அசுவினி: பண வரவில் ஏற்பட்ட தடை விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மனதில் தெளிவு உண்டாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். புதிய முயற்சிகளில் இறங்கி லாபம் காண்பீர்.பரணி: கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட சங்கடம் விலகும். கேட்ட பணம் கிடைக்கும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடியும். ராசியாதிபதி உச்சமாகி இருப்பதால் புதிய இடம், வீடு, வாகனம் வாங்குவீர்.கார்த்திகை 1ம் பாதம்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வரும். வியாபாரத்தை விரிவு செய்வீர். அரசுவழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !