வார ராசிபலன்
வார ராசிபலன் மேஷம்
வார பலன் ( 27.2.2026 - 5.3.2026)மேஷம்: சங்கர நாராயணரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.அசுவினி: வேலை பளு அதிகரிக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகள் வந்து உங்களை நெருக்கடிக்கு ஆளாக்கும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும்.பரணி: ராசியாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருமானம் உயரும். உங்கள் விருப்பங்கள் பூர்த்தியாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். வருமானம் அதிகரிக்கும்.கார்த்திகை 1ம் பாதம்: லாப சூரியனால் வருமானம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வரும். வேலைக்காக, வெளிநாடு செல்ல மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். அரசியல் வாதிகளுக்கு புதிய பொறுப்பு கிடைக்கும்