வார ராசிபலன்
வார ராசிபலன் மேஷம்
வார பலன் ( 6.3.2026 - 12.3.2026 )மேஷம்: சனீஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.அசுவினி: விரய ஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சரித்தாலும் லாப ஸ்தானம் பலமடைவதால் உங்களுக்கேற்பட்ட நெருக்கடி நீங்கும். எடுக்கும் வேலை வெற்றியாகும். தொழில் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும். திங்கள் செவ்வாயில் சிந்தித்து செயல்படுவது நல்லது.பரணி: அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் உங்கள் நிலையை உயர்த்துவார். குடும்பத்தில் நிம்மதி உண்டாக்கும். வியாபாரத்தில் லாபத்தை அதிகரிப்பார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றத்தை ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை வழங்குவார். செவ்வாய் புதன் அன்று நிதானம் காப்பது நல்லது.கார்த்திகை 1ம் பாதம்: லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வருமானம் உயரும். வராமல் இருந்த பணம் வரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் தொடங்க அனுமதி கிடைக்கும். புதன் அன்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது.சந்திராஷ்டமம்: 9.3.2026 காலை 10:09 மணி - 11.3.2026 இரவு 9:50 மணி