உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மேஷம்

வார பலன் (13.3.2026 - 19.3.2026)மேஷம்: பைரவரை வழிபட சங்கடம் விலகும்.அசுவினி: நிதானமாக செயல்படவேண்டிய நேரமிது. வேலைகளில் கூடுதல் கவனம் தேவை. பிள்ளைகளுக்காக செலவு அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் பிரச்னை உருவாகும் என்பதால் நிதானம் அவசியம்.பரணி: எதிர்பார்த்த பணம் வரும். தொழில் முன்னேற்றம் அடையும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் இருப்பவர் கனவு நனவாகும். குடும்ப நெருக்கடி நீங்கும்.கார்த்திகை 1ம் பாதம்: ஞாயிற்றுக்கிழமை முதல் சூரியன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வீண் செலவு தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். ராசிநாதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தேவைக்கேற்ற பணம் வரும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !