உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மேஷம்

வார பலன் ( 3.4.2026 - 9.4.2026)மேஷம்: கற்பக விநாயகரை வழிபட சங்கடம் விலகும்.அசுவினி: லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவை குரு பார்ப்பதால் பணவரவில் ஏற்பட்ட தடை விலகும். இதுவரை இருந்த நெருக்கடி  நீங்கும். எடுக்கும் வேலை வெற்றியாகும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். ஞாயிறு திங்களில் கவனமாக செயல்படுவது நல்லது.பரணி: ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் சுக்கிரன் உங்கள் நிலையை உயர்த்துவார். சிலர் பொன் பொருள் புதிய வாகனம் என வாங்குவீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திங்கள் செவ்வாயில் அனைத்திலும் நிதானம் தேவை.கார்த்திகை 1ம் பாதம்: விரய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சனி சஞ்சரிப்பதால் செலவும் அலைச்சலும் அதிகரிக்கும். வியாபாரம், தொழிலில் இழுபறியான நிலை இருக்கும், சிலருக்கு மருத்துவச் செலவும் ஏற்படும். நிதானமாக செயல்படுவது நல்லது. செவ்வாய்க்கிழமை சில சங்கடங்களை சந்திப்பீர்.சந்திராஷ்டமம்: 5.4.2026 மாலை 5:14 மணி - 8.4.2026 அதிகாலை 4:55 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !