உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மேஷம்

 வார பலன் (10.4.2026 - 16.4.2026)மேஷம்: அதிகாலையில் சூரியனை வழிபட சங்கடம் விலகும்.அசுவினி: விரய ஸ்தானத்தில் ராசிநாதனும் சனியும் சஞ்சரிப்பதால் எடுக்கும் வேலைகளில் கூடுதல் கவனம் தேவை. வீண் செலவு ஏற்பட வாய்ப்பிருப்பதால் அனைத்திலும் நிதானம் தேவை, வியாபாரிகள் புதிய முதலீடு செய்வதற்கு முன் மார்க்கெட் நிலவரம் அறிந்து செயல்படுவது அவசியம்.பரணி: ராசிக்குள் தனாதிபதி சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும், கணவன் மனைவிக்குள் தோன்றிய இடைவெளி விலகும். பொன் பொருள் சேரும்.கார்த்திகை 1ம் பாதம்: செவ்வாய்க்கிழமை முதல் சூரியன் ராசிக்குள் சஞ்சரிப்பதால் சுறு சுறுப்பாக செயல்படுவீர், அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடும், ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தேவைக்கேற்ற பணம் வரும். விருப்பம் பூர்த்தியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !