வார ராசிபலன்
வார ராசிபலன் மேஷம்
வார பலன் ( 8.5.2026 - 14.5.2026)மேஷம்: அதிகாலையில் சூரியனை வழிபட எடுக்கும் வேலை வெற்றியாகும்.அசுவினி: குருவின் பார்வை 7,9,11 ம் இடங்களுக்கு உண்டாவதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். தம்பதிக்குள் ஏற்பட்ட சங்கடம் விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும்.பரணி: வாக்காதிபதி ஆட்சி பலம் பெறுவதால் வருமானம் அதிகரிக்கும். கடன் தொல்லை விலகும். எடுத்த வேலையும் நேற்றைய முயற்சியும் வெற்றியாகும். ஆடை ஆபரணம் சேரும். விரய ஸ்தானத்தை விட்டு செவ்வாய் விலகுவதால் செயல்களில் வேகம் இருக்கும்.கார்த்திகை 1ம் பாதம்: பூர்வ புண்ணியாதிபதி உச்சமாக சஞ்சரிப்பதால் திறமை வெளிப்படும். உற்சாகமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உழைப்பிற்கு ஏற்ற லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய பதவி கிடைக்கும்.