/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் மேஷம்
வார பலன் ( 15.5.2026 - 21.5.2026)மேஷம்: திருச்செந்துார் முருகனை வழிபட நன்மை நடக்கும், சங்கடம் விலகும்.அசுவினி: கேது பகவான் குழப்பத்தை ஏற்படுத்துவார். பிள்ளைகள் பற்றிய கவலை அதிகரிக்கும், பூர்வீக சொத்தில் பிரச்னை ஏற்படும். வேலைகளில் சங்கடம் தோன்றும். அரசியல்வாதிகளுக்கு நெருக்கடி அதிகரிக்கும். நிதானம் தேவை.பரணி: சுக்கிரன் சாதகமாக இருப்பதால் கையில் பணம் புரளும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தொழில் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பழைய கடன்களை அடைப்பீர்.கார்த்திகை 1ம் பாதம்: சூரிய பகவானால் மனம் குழப்பம் அடையும். தேவையற்ற சிந்தனை குழப்பத்தை தரும். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். நிம்மதியை தேடும் நாள்.