உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மேஷம்

 வார பலன் ( 22.5.2026 - 28.5.2026)மேஷம்: சுப்ரமணியரை வழிபட சங்கடங்கள் விலகும்.அசுவினி: குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். அரசியல் வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும்.பரணி: வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். தொழில் தொடங்குவதற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். கையில் பணம் புரளும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.கார்த்திகை 1ம் பாதம்: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நன்மையளிக்கும். தேவையற்ற பயமும் சிந்தனைகளும் ஏற்பட்டு மனதைக் குழப்பிக் கொண்டிருப்பீர்கள். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படும். உங்கள் கவனக்குறைவால் செய்யும் வேலையில் தவறு உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !