வார ராசிபலன்
வார ராசிபலன் மேஷம்
வார ராசி பலன் (29.5.2026 - 4.6.2026)மேஷம்: கற்பகாம்பாளை வழிபட சங்கடங்கள் விலகும்.அசுவினி: குழப்பம் அதிகரிக்கும். பிள்ளைகள் மீது கவலை ஏற்படும். பூர்வீக சொத்தில் பிரச்னை தோன்றும். ராசிநாதன் செவ்வாய் ஆட்சியாக சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர். சனிக்கிழமை புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.பரணி: சுக்கிரபகவனால் வரவேண்டிய பணம் வரும். தம்பதிக்குள் ஏற்பட்ட இடைவெளி விலகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். ஞாயிறு திங்கள் அன்று நல்லது நடக்கும்.கார்த்திகை 1ம் பாதம்: சூரியபகவனால் மனம் குழப்பம் அடையும். தேவையற்ற சிந்தனைகளால் வேலைகளில் தடுமாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படும். அரசுவழி முயற்சி இழுபறியாகும். திங்கள் அன்று அனைத்திலும் நிதானம் தேவை.சந்திராஷ்டமம்: 30.5.2026: காலை 7:42 மணி - 1.6.2026 இரவு 7:20 மணி