/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் மேஷம்
வார பலன் (5.6.2026 - 11.6.2026)மேஷம்: திருச்செந்துார் முருகனை வழிபட வேண்டுதல் பலிக்கும்.அசுவினி: மனதில் தேவையற்ற குழப்பத்தினால் நெருக்கடி ஏற்படும். அது ராசிநாதன் ஆட்சியாக இருப்பதால் சரியாகும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுத்த வேலைகள் அனைத்தும் சாதகமாகும்.பரணி: வேலைபளுவால் சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வியாபாரம் லாபம்தரும். வரவேண்டிய பணம்வரும். தம்பதிக்குள் ஏற்பட்ட இடைவெளி விலகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.கார்த்திகை 1ம் பாதம்: குழப்பம் வேண்டாம். வேலைகளில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். அதுவும் உங்களுக்கு நன்மையாகவே இருக்கும்.