வார ராசிபலன்
வார ராசிபலன் மேஷம்
வார பலன் ( 26.6.2026 - 2.7.2026 )மேஷம்: விநாயகரை வழிபட சங்கடம் விலகும்.அசுவினி: மனக்குழப்பம் அதிகரிக்கும். பிள்ளைகள் எதிர்காலம் குறித்து கவலை உண்டாகும். பூர்வீக சொத்தில் பிரச்னை தோன்றும். சூரிய பகவனால் எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர். வெள்ளி சனிகிழமை அன்று புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.பரணி: வரவேண்டிய பணம் வரும். தம்பதிக்குள் ஏற்பட்ட இடைவெளி விலகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். சனி ஞாயிறு அன்று செய்த செயல் நன்மையில் முடியும்.கார்த்திகை 1ம் பாதம்: சூரிய பகவானால் எடுத்த வேலை வெற்றியாகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். அரசுவழி முயற்சி வெற்றியாகும். ஞாயிறு அன்று அனைத்திலும் நிதானம் தேவை.சந்திராஷ்டமம்: 26.6.2026 மாலை 3:09 மணி - 29.6.2026 அதிகாலை 2:43 மணி