உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மேஷம்

வார பலன் ( 3.7.2026 - 9.7.2026)மேஷம்: திருச்செந்துார் வேலவனை வழிபட வேண்டுதல் பலிதமாகும்.அசுவினி: மனக்குழப்பம் செயல்களில் நெருக்கடி ஏற்பட்டாலும் ராசிநாதன் வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். தேவைக்கேற்ற பணம் வரும். திறமை வெளிப்படும்.பரணி: உறவினர் ஆதரவு கிடைக்கும். வேலை சுமையால் சங்கடமான வந்த நிலை மாறும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தொழில் லாபம் தரும். வர வேண்டிய பணம் வரும். புதிய வாகனம் வீட்டிற்கு வரும்.கார்த்திகை 1ம் பாதம்: தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அரசு வழி வேலை நடக்கும். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !