/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் மேஷம்
வார பலன் (17.7.2026 - 23.7.2026)மேஷம்: சிவபெருமானை வழிபட எடுக்கும் வேலை வெற்றியாகும்.அசுவினி: உழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். செலவு கட்டுப்படும். செல்வாக்கு வெளிப்படும். திடீர் வாய்ப்பு தேடிவரும். வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.பரணி: வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். புதிய வாகனம் நவீன பொருட்கள் வாங்குவீர். தம்பதிக்குள் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். சனி பகவான் வக்கிரம் அடைந்து இருப்பதால் அவரின் பாதிப்பு விலகும்.கார்த்திகை 1ம் பாதம்: வேலைபளு கூடும். அலைச்சல் அதிகரிக்கும். தடைபட்ட வேலை நடக்கும். பணியாளர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். அரசு வேலைகள் சாதகமாகும். வரவேண்டிய பணம் வீடு வந்து சேரும்.