உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மேஷம்

 வார பலன் (24.7.2026 – 30.7.2026)மேஷம்:அங்காள பரமேஸ்வரியை வழிபட சங்கடம் விலகும்.அசுவினி: மனக்குழப்பம் விலகும். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை பேசி தீர்ப்பீர். வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதி உண்டாகும். வெள்ளிக்கிழமை புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.பரணி: சுக்கிரன், ராகு சாதகமாக சஞ்சரிப்பதால் இழுபறி வேலை முடியும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். சனிக்கிழமை அன்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது.கார்த்திகை 1ம் பாதம்: சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் வேலைபளு அதிகரிக்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் மறைமுகத் தொல்லை உண்டாகும். உங்களுக்குள் இனம் புரியாத பயம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது அவசியம். ஞாயிறு அன்று அனைத்திலும் நிதானம் தேவை.சந்திராஷ்டமம்: 23.7.2026 இரவு 10:36 மணி - 26.7.2026 காலை 10:04 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !