வார ராசிபலன்
வார ராசிபலன் மேஷம்
வார பலன் (21.8.2026 - 27.8.2026)மேஷம்: அதிகாலையில் சூரியனை வழிபட சங்கடங்கள் விலகும்.அசுவினி: பூர்வ புண்ணியாதிபதி ஆட்சி பெற்றிருப்பதால் மனதில் இருந்த பயம் போகும். குழப்பம் விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். வேலைப்பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும்.பரணி: யோகக்காரகன் ராகு சாதகமாக சஞ்சரிப்பதால் இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். கையில் பணம் புரளும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சச்சரவு இருந்த இடம் தெரியாமல் போகும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். வெள்ளிக்கிழமை திட்டமிட்டு செயல்படுவது நன்மையாகும்.கார்த்திகை 1ம் பாதம்: உற்சாகமாக செயல்படுவீர்கள். அரசுவழி முயற்சிகள் வெற்றியாகும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவு கிடைக்கும் என்றாலும் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையளிக்கும். வெள்ளி சனியில் அனைத்திலும் நிதானம் தேவை.சந்திராஷ்டமம்: 20.8.2026 அதிகாலை 5:53 மணி - 22.8.2026 மாலை 5:15 மணி