வார ராசிபலன்
வார ராசிபலன் மேஷம்
வார பலன் (18.9.2026 - 24.9.2026)மேஷம்: நவக்கிரகத்திற்கு சனிக்கிழமை நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபட சங்கடங்கள் விலகும்.அசுவினி: ராகுவும், செவ்வாயும் எடுக்கும் வேலையை வெற்றியாக்குவர். எதிர்பார்த்த லாபம் வரும். உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். வேலைப்பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். சேமிப்பு உயரும்.பரணி: சுக்கிரபகவானால் நட்பு விரியும். இழுபறி வேலை முடியும். தம்பதிக்குள் பிரச்னை ஏற்பட்டு வந்த இடம் தெரியாமல் போகும். தொழில் முன்னேற்றம் அடையும். வெள்ளிக்கிழமை கவனமாக செயல்படுவது நல்லது.கார்த்திகை 1ம் பாதம்: சூரியன் சஞ்சரிப்பதால் ஆரோக்கியம் மேம்படும். உற்சாகமாக செயல்படுவீர். அரசுவழியில் வேலை வெற்றியாகும். அரசியல்வாதி செல்வாக்கு உயரும். வேலையில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும். வழக்கு சாதகமாகும். வெள்ளி அன்று அனைத்திலும் நிதானம் தேவை.சந்திராஷ்டமம்: 16.9.2026 மதியம் 1:06 மணி - 19.9.2026 அதிகாலை 12:21 மணி