வார ராசிபலன்
வார ராசிபலன் மேஷம்
வார பலன் (2.10.2026 - 8.10.2026)மேஷம்: அதிகாலையில் சூரியனை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும்.அசுவினி: உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் வரும். எடுக்கும் வேலை வெற்றியாகும். வேலையில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். மறைமுகத் தொல்லை விலகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும்.பரணி: எடுக்கும் வேலைகளில் கவனம் தேவை. எதிர்பாலினரால் உங்கள் மனம் தடுமாறுவதுடன் கடமைகளும் மறந்துபோக வாய்ப்பிருப்பதால் வியாபாரம் தொழிலில் கவனம் செலுத்த முடியாமல் போகும். ராசிநாதனும் நீச்சம் அடைந்து இருப்பதால் வழக்கமான உங்கள் வேகம் சுறு சுறுப்பு குறையும். பிறருடைய விமர்சனத்திற்கு ஆளாவீர்.கார்த்திகை 1ம் பாதம்: ஆறாமிட சூரியனால் ஆற்றல் அதிகரிக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பும் மனநிலையில் தோன்றிய குழப்பமும் விலகும். தடைபட்ட வேலை நடந்தேறும். அரசுவழி முயற்சி நிறைவேறும். வேலையில் இருப்பவர்களுக்கு நிம்மதியான நிலை உண்டாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.