வார ராசிபலன்
வார ராசிபலன் மேஷம்
வார பலன் (9.10.2026 - 15.10.2026 )மேஷம்: கற்பக விநாயகரை வழிபட நன்மை உண்டாகும்.அசுவினி: திட்டமிட்டு செயல்படுவதால் தொழில் வளர்ச்சி அடையும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வரும். செவ்வாய் புதனில் செயல்களில் கவனம் தேவை.பரணி: சுக்கிரன் வக்கிரம் அடைவதால் கட்டுப்பாட்டுடன் செயல்படுவீர். தவறாவர்களை விட்டு விலகுவீர். செய்துவரும் தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். தேவைக்கு ஏற்ற பணம் வரும். புதன் வியாழன் அன்று உங்கள் வேலைகளில் நிதானம் தேவை.கார்த்திகை 1ம் பாதம்: சூரியனால் செல்வாக்கு உயரும். ஆரோக்கியம் மேம்படும். எதிர்ப்பு விலகும். வழக்கு ஜெயமாகும். வருமானம் அதிகரிக்கும். தடைபட்ட வேலை நடக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.சந்திராஷ்டமம்: 13.10.2026 இரவு 8:16 மணி - 16.10.2026 காலை 7:21 மணி