உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் மேஷம்

வார பலன் (16.10.2026 - 22.10.2026 )மேஷம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடம் விலகும்.அசுவினி: உங்களுக்கு குரு பார்வை கிடைப்பதால் எடுக்கும் வேலை வெற்றியாகும். எதிர்பார்த்த லாபம் வரும். உங்களுக்கு இருந்த நெருக்கடி நீங்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். வேலையில் நிம்மதியான நிலை உண்டாகும். பரணி: அந்நியரால் ஏற்பட்ட சங்கடம் விலகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும். பொன் பொருள் சேரும்.கார்த்திகை 1ம் பாதம்: உற்சாகமாக செயல்படுவீர். அரசு வழியில் மேற்கொள்ளும் வேலை வெற்றியாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். வேலையில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும். வழக்கு சாதகமாகும். செயல்களில் கவனம் தேவை.சந்திராஷ்டமம்: 13.10.2026 இரவு 8:16 மணி - 16.10.2026 காலை 7:21 மணி  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !