வார ராசிபலன்
வார ராசிபலன் ரிஷபம்
வார பலன் (24.10.2025 - 30.10.2025)ரிஷபம்: லட்சுமி நரசிம்மரை வழிபட சங்கடம் விலகும்.கார்த்திகை 2,3,4: சூரியன் செல்வாக்கை உயர்த்துவார். வேலையில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். அரசியல்வாதிகள் கனவு நனவாகும். அரசு வழி முயற்சி சாதகமாகும். உடல்நிலை சீராகும். ஞாயிறு அன்று புதிய முயற்சி வேண்டாம்ரோகிணி: குருவின் பார்வையால் குழப்பம் விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். தொழில் முன்னேற்றம் அடையும். வரவு அதிகரிக்கும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். திங்கள் கிழமை திட்டமிட்டு செயல்படுவது நல்லது.மிருகசீரிடம் 1,2: ஆறாமிட செவ்வாயால் சமுகத்தில் நிலை உயரும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்க வைப்பார். செவ்வாய்கிழமை சிந்தித்து செயல்படுவது அவசியம்.சந்திராஷ்டமம்: 26.10.2025 காலை 9:33 மணி - 28.10.2025 இரவு 7:30 மணி