உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / வார ராசிபலன்

வார ராசிபலன் ரிஷபம்

வார பலன் (11.7.2025 - 17.7.2025)ரிஷபம்: விநாயகரை வழிபட வாழ்க்கை வளமாகும்.கார்த்திகை 2,3,4: தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் உடன்  பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தினர் ஆலோசனை உங்களைப் பாதுகாக்கும். வார்த்தைகளில் நிதானம் தேவை.ரோகிணி: குருவின் சஞ்சாரமும் பார்வைகளும் உங்கள் நிலையை உயர்த்தும். பண வரவு அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். மன நிம்மதியை உண்டாக்கும். உடல்நிலையை சீராக்கும். எதிர்ப்பை இல்லாமல் செய்யும்.மிருகசீரிடம் 1,2: சுக ஸ்தானத்தில் செவ்வாய் கேது சஞ்சரிப்பதால் செயல்களில் நிதானம் வேண்டும். உறவுகளையும் நண்பர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது. தாயாரின் உடல்நிலையிலும் சிறு சங்கடம் தோன்றும். வெள்ளிக்கிழமை விழிப்புடன் செயல்படுவது நல்லது.சந்திராஷ்டமம்: 9.7.2025 அதிகாலை 4:33 மணி - 11.7.2025 மதியம் 1:32 மணி 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !