வார ராசிபலன்
வார ராசிபலன் ரிஷபம்
வார பலன் (1.8.2025 - 7.8.2025)ரிஷபம்: லட்சுமி நாராயணரை வழிபட வாழ்க்கை வளமாகும்.கார்த்திகை 2,3,4: சூரியன் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். செல்வாக்கை உயர்த்துவார். இதுவரை இருந்த நெருக்கடி விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வருமானம் உயரும். தொழில் முன்னேற்றம் அடையும். செவ்வாய் அன்று சிந்தித்து செயல்படுவது அவசியம்.ரோகிணி: குருபகவானின் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதன்கிழமை கவனமாக செயல்படுவது நல்லது.மிருகசீரிடம் 1,2: செவ்வாய் பகவானால் சங்கடங்களுக்கு ஆளாகுவீர். குருவும், சூரியனும் வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றத்தை உண்டாக்குவர். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாகும். வியாழன் அன்று விழிப்புடன் செயல்படுவது நல்லது.சந்திராஷ்டமம்: 5.8.2025 காலை 11:57 மணி - 7.8.2025 இரவு 9:12 மணி