/   ஜோசியம்   /  வார ராசிபலன்                      
                      வார ராசிபலன்
வார ராசிபலன் ரிஷபம்
வார பலன் 3.10.2025 - 9.10.2025ரிஷபம்: வரதராஜ பெருமாளை வழிபட வாழ்க்கை வளமாகும்.கார்த்திகை 2,3,4: சூரியனால் உடல்நிலையில் பாதிப்பு உண்டாகும். குரு பார்வையால் நோய் நொடி, வம்பு வழக்கு உங்களை நெருங்காது. குடும்பம், தொழில், உத்தியோகத்தில் அமைதியான நிலை இருக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.ரோகிணி: புதன் வரை இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் குருவால் உங்கள் நிலை உயரும். குடும்பத்தில் நெருக்கடி விலகும். வேலையில் நிம்மதி உண்டாகும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.தொழில் முன்னேற்றம் அடையும்.மிருகசீரிடம் 1,2: செவ்வாயும் புதனும் இந்த வாரத்தை அதிர்ஷ்ட வாரமாக மாற்றுவார்கள். வர வேண்டிய பணம் வரும். தடைபட்ட வேலை நடக்கும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். புதிய சொத்து சேரும்