/ ஜோசியம் / வார ராசிபலன்
வார ராசிபலன்
வார ராசிபலன் ரிஷபம்
வார பலன் (14.11.2025 - 20.11.2025)ரிஷபம்: மகாலட்சுமியை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.கார்த்திகை 2,3,4: சூரியனால் உங்களுக்கிருந்த மனஅழுத்தம், நெருக்கடி, போராட்டம் விலகும். செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.ரோகிணி: புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். எடுத்த வேலை முடியும். பொன் பொருள், வீடு, மனை, வாகனம் என்ற கனவு நனவாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.மிருகசீரிடம் 1,2: குரு பார்வையால் தடைபட்ட வேலை முடியும். தம்பதிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும்.